User Reviews for Aandavan Kattalai


Worth to watch
on

Nice script but sometimes it feels slow moving movie

1
Sema mass.cimedy plus concept
on

1
ஆண்டவன் கட்டளை - ஆசுவாசமான ஆஸம் . http://pesalamblogalam.blogspot.in/2016/09/aandavan-kattalai.html ...
on

காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் மூன்றாவதாக , இந்த வருடத்தில் இரண்டாவதாக வந்திருக்கும் படம் ஆண்டவன் கட்டளை . சிம்பிளான ஸ்டோரி , ஷார்ப்பான வசனங்கள் , ஸ்மார்ட்டான ஆக்டிங் , ஸ்லோவான திரைக்கதை இவற்றின் மொத்த கலவையே ஆ.க . ப்ரதர் என்று சொல்வதற்கே சோம்பேறித்தனப்பட்டு ப்ரோ என சுருக்கமாக கூப்பிடும் இந்த காலத்தில் நீட்டி முழுக்கும் திரைக்கதை தவிர ( 2.31 மணி நேர படம் ) வேறெந்த குறையுமில்லை ...

கடனை அடைக்க பாஸ்போர்ட்டில் சில குளறுபடிகள் செய்து லண்டனுக்கு சென்று சம்பாதிக்க நினைக்கிறார் காந்தி ( விஜய் சேதுபதி ) . அவரின் ஆசை நிறைவேறியதா ? என்பதை ஸ்லோவாக இருந்தாலும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் . விஜய் சேதுபதி யின் மூவீ கலக்சனில் ஆண்டவன் கட்டளைக்கு நிச்சயம் முக்கிய இடமுண்டு ...

யதார்த்தமான நடிப்பென்றால் விஜய் சேதுபதிக்கு பதார்த்தம் சாப்பிடுவது போல . தனக்கென்று ஒரு ஸ்டார் அந்தஸ்து வந்தும் இது போன்ற படங்களை தேர்ந்தெடுப்பது அவரது தனித்துவம் போலும் . தனக்கு விசா கிடைக்காமல் பாண்டிக்கு ( யோகி பாபு ) கிடைத்தவுடன் இவர் காண்டாகுமிடம் சூப்பர் . வீட்டை காலி செய்யும் போது ஓனரை கலாய்க்கும் இடத்தில் வெளியூரிலிருந்து வந்து தங்கி வாடகை வீட்டில் லோல்படும் பல பேச்சிலர்களின் வயிற்றில் பீரை சாரி பாலை வார்க்கிறார் ...

ரித்திகா சிங் கிற்கு இறுதி சுற்று க்குப் பிறகு வித்தியாசமான கேரக்டர் . படம் ஆரம்பித்து நீண்ட நேரம் கழித்து வந்தாலும் நிறைவு . விஜய் சேதுபதி காதலை சொன்னவுடன் வெட்கப்படுவது நல்ல நடிப்பு ( இப்போல்லாம் யாருங்க உண்மையிலேயே வெட்கப்படுறா?!) . யோகி பாபு ஆவரேஜ் ஸ்பீடில் நகரும் முதல் பாதியில் அரங்கத்தை அதிர வைக்கிறார் . ஓனரிடம் " நாங்க மூடிக்கிறோம் அங்கிள் " என்று சொல்லுமிடம் அப்லாஸ் . ரூபா , நாசர் . எஸ்.எஸ்.ஸ்டான்லி என நிறைய பேர் நிறைவாக நடித்திருந்தாலும் இலங்கை தமிழர் நேசனாக நடித்திருப்பவர் நெஞ்சை தொடுகிறார் . ப்ராட் வேலை செய்து கைது செய்யப்படுவர் போட்டோவை போட்டு " போராளி கைதா " என செய்தித்தாளில் வரும் சின்ன ஷாட் ஈழத்தை வைத்து இங்கு நடக்கும் பெரிய அரசியல் வியாபாரத்தை கச்சிதமாக காட்டுகிறது ...

வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆசையில் உள்ளவர்களிடம் ஏஜென்ட் செய்யும் திகிடுதித்தங்கள் , இடைத்தரகர்களின் ஏமாத்து வேலைகள் , சென்னையில் பத்துக்கு பத்து வீட்டை வைத்துக்கொண்டு ஓனர்கள் செய்யும் பம்மாத்துக்கள் , அதிகரித்து வரும் டைவர்ஸ் கேஸுகள் என படம் போகிற போக்கில் நிறைய விஷயங்களை தோலுரித்துக் காட்டுகிறது . ஒரு தவறை நேரடியாக திருத்திக் கொள்வதை விட்டுவிட்டு சுற்றி வளைப்பதில் உள்ள சிக்கல்களை சொல்கிறது படம் . என்ன கொஞ்சம் அதிகமாகவே சுற்றி வளைத்துவிட்டார்கள் . படம் யதார்த்தமாக இருப்பது நல்லது தான் . ஆனால் ஹீரோ நிற்பது , நடப்பது , போறது என எல்லாத்தையும் ஸ்லோவாக காட்டுவதை தவிர்த்திருக்கலாம் . விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்படும் படம் வெகுஜன ரசனைக்கு சற்று தொலைவில் இருப்பதன் முக்கிய காரணம் ஹீரோவுக்கு பிரச்சனை அதை எப்படி தீர்க்கிறான் என்கிற ஒன்லைனை பரபரப்பான திரைக்கதையாக்காமல் கொஞ்சம் ஆசுவாசமாக எடுத்திருப்பதே . நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் இதை நன்றாகவே கையாண்டிருப்பார்கள் ...

ரேட்டிங் : 3.25 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 43

0
good movie
on

good movie

0