User Reviews for Enakku Vaaitha Adimaigal

எனக்கு வாய்த்த அடிமைகள் - விமர்சனம்
on

படத்தின் பெயரைப்பார்த்த உடனே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது பக்கா காமெடி படம் தான் என்று. ஆமா காமெடிப்படம் தான். எனக்கு வாய்த்த அடிமைகள், என்ற டைட்டில் தான், ட்விஸ்ட்.

யார், யாரை எனக்கு வாய்த்த அடிமைகள் அப்டின்னு சொல்றாங்க... அப்டிங்கிற சிம்பிள் சின்ன கதைக்கருவை வச்சிட்டு, அடிச்சு ஆடுறார் அறிமுக இயக்குநர் மகேந்திரன் ராஜமணி.

எல்லாருக்கும் தெரிஞ்ச ரொம்ப சாதாரணமான கதை, கதைக்களம் தான்... ஆனா வரிக்கு வரி, வசனத்தை வச்சே... கலகலக்க வைக்கிறாங்க. உங்க டேஸ்ட்டை எல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு, எம்ப்ட்டியா போய் உட்கார்ந்தீங்கன்னா கண்டிப்பா கொஞ்ச நேரம் வாய் விட்டு சிரிச்சிட்டு வரலாம்.

ஒரு ஹீரோ, ஜெய். மூன்று காமெடி நண்பர்கள். காளி, கருணாகரன், நவீன் ஜார்ஜ் தாமஸ். ஹீரோ வழக்கம்போல ஹீரோயினை லவ் பண்றார். ரெண்டு பேரும் தான். ஹீரோயின் திடீர்னு செல்வராகவன் ஹீரோயின் மாதிரி, இன்னொரு மொக்க பையன் பாக்கெட்டுக்குள்ள போயிடுறாங்க. வெக்ஸ் ஆகிற ஹீரோ, நண்பர்களுக்கு போன் போட்டு தற்கொலை பண்ணிக்கப்போறேன்னு சொல்லிட்டு காணாம போகிறார்.

நண்பனை தேடி அலையிற காமெடி நண்பர்களும், நண்பர்களாக இருப்பதாலேயே அவங்க போய் மாட்டிக்கிற பிரச்சினைகளும் தான் படம். ஆக, இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும் யாரு அடிமைகள். யாருக்கு அடிமைகள்னு. காதலிக்கிற பசங்களோட நண்பர்களுக்கு இந்த படம் ரொம்ப நெருக்கமாக இருக்கும்.

காளி வெங்கட்... கெடைக்கிற கேப்புல எல்லாம், ஒட்டகமே வெட்டுறார். ஆமா காளி இதுல பாய். மைதீன் பாய். பொண்டாட்டி கூட சல்சா பண்ண முடியாம காண்டு ஆகிற மைதீன் பாயா ஒரு பக்கம் சிரிக்க வைக்கிறார். இன்னொரு பக்கம் கருணாகரனை கடுப்பேத்தி காண்டு ஆக்கிறப்போ அலற அலற சிரிக்க வைக்கிறார். காளி வெங்கட்டையும் அவரோட திறமையும் ஓரளவுக்கு சரியா பயன்படுத்திக்கிட்ட படங்களில் இதுவும் ஒண்ணு.

கருணாகரன், நவீன், காளி மனைவியாக நடித்திருக்கும் வினிதா, கருணாகரனின் வருங்கால மனைவியாக நடித்திருக்கும் ப்ரியங்கா ரூத், எல்லாரும் சிறப்பா சிரிக்க வைக்கிறாங்க. பிரேம்ஜியை தலைவான்னு கூப்பிட்டு, ஆட்டம் போடுற ஜெய், "கடைசில பிரேம்ஜி பாட்டுக்கு டான்ஸ் ஆட விட்டுட்டிங்களேடா" என கலாய்த்துத்தள்ளுகிறார். இவர்கள் தவிர போனஸ்க்கு தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரனும் உண்டு. காமெடி படம் என்றாலே ஒவ்வொரு காட்சிக்கும் இசையமைப்பாளர் தன் பங்குக்கு துணை நிற்க வேண்டும். சந்தோஷ் தயாநிதி அடிமைகளுக்கும் அடிமைகளின் ஓனருக்கும் தன் பின்னணி இசையால் ரொம்பவே கை கொடுக்கிறார்.

ஆனா ஹீரோயின் சார், ப்ரணிதா சார், அழகுப்பொண்ணு சார்... அந்தப்பொண்ணை ஊறுகாய் அளவுக்குத்தான் நீங்களும் தொட்ருக்கீங்க... ஹீரோவையும் தொட விட்ருக்கீங்க. இட்ஸ் வெரி பேட் டியர் டைரக்டர் சார். ஐ காண்டு யூ. சரி, அந்த மென்ஸ் டாய்லெட் மேட்டருக்காவது விடை சொல்லி, அந்த ப்ரணிதா புள்ளைய நல்ல புள்ளயாக்கிருவீங்கன்னு ரொம்பவே எதிர்பார்த்தேன் சார். பட், கடைசி வரை நீங்க அந்தப்புள்ளைய கெட்ட புள்ளையாவே மெயின்டெய்ன் பண்ணீட்டீங்களே.

அஞ்சலி, மேரேஜ்... அதுக்காக ப்ரணிதாவை கெட்ட புள்ளையாக்கீட்டீங்களா... யுவர் ஹானர். காமெடின்னாலே பேசுறதுதான்னு ஆக்கிட்டாங்க. அதனாலே பேசிக்கிட்டே இருக்கிறதை எல்லாம் பெரிய குறையா எடுத்துக்க முடியல. நிறைய இடங்களில் இயக்குநரின் வசனங்கள் உங்களை கண்டிப்பாக சிரிக்க வைக்கும். அதனால ஓவர் பேச்சா இருந்தாலும் பேச்சு ஓகே.

முன்னாலயே சொன்ன மாதிரி, நீங்களாவே எதையும் முடிவு பண்ணிக்காம... ரொம்ப சாதாரணமான ஒரு படத்தை பார்க்கப்போறோம்னு நெனைச்சிட்டு போனீங்கன்னா... ரெண்டே கால் மணி நேர படத்துல நாலு கால் மணி நேரத்துக்காவது கண்டிப்பா சிரிப்பீங்க.

- முருகன் மந்திரம்
http://www.cinemaparvai.com/site/news/enakku-vaaitha-adimaigal-review/

0