தன் காதலுக்காக ரேஸ் களத்தினை சந்திக்கும் நாயகன்.
அனைத்து விதத்திலும் வேக குறைவான நாயகன் (அதர்வ) பிட்சா டெலிவரி முதல் ஜாக்கிங் வரை அனைத்தும் ஸ்லொவ். எனவே அவரை “ஸ்லொவ் கிங்” என்று அவார்ட் வாங்குகிறார். அப்போ அப்போ சந்திக்கும் பிரியா ஆனந்த் மீது காதல் கொள்கிறார். பிரியா ஆனந்த் மிக பெரிய பைக் ரசிகை. பைக் சவுண்ட் வைத்து பைக் மாடல் சொல்லும் அளவிற்கு பைக் மீது மோகம். எனவே அதர்வவினை பைக் வாங்க சொல்லி கட்டாய படுத்துகிறார்.
லக்ஷ்மி ராய் கடையில் அதிவேக பைக்கினை வாங்குகிறார்கள். ஒரு சமயம் அதர்வ, பிரியா ஆனந்த் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் வழிமறித்து பிரியா ஆனந்தினை கடத்தி செல்கிறது. தன் நண்பர்கள் உதவியுடன் பிரியா ஆனந்த் இருக்கும் இடத்தினை கண்டுபிடிக்கிறார் அதர்வ. பைக் ரேசில் வெற்றி பெற்றால் மட்டுமே பிரியா ஆனந்த் தனக்கு என்ற சிக்கலான சந்தற்பதினை எதிர் கொள்கிறார். அவர் எதற்காக பைக் ரேசில் கட்டாய படுத்த படுகிறார்? “ஸ்லொவ் கிங்” பைக் ரேசில் வெற்றி பெற்றாரா? என்பது மீதி கதை.
அதர்வ நச்சினு இருக்கார். அதுவும் அந்த சிக்ஸ் பேக் கட்சியில் அருமை. பிரியா ஆனந்த லக்ஷ்மி ராய் அழகாக இருகிறார்கள் ஆனால் நடிக்கும் வைப்பு இந்த படத்தில் பெரிதாக இல்லை. ஜெகன் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.
பின்னணி இசை பக்க பலமாக உள்ளது ஆனால் பாடலால் ஓகே ரகம்.
அறிமுக இயக்குனரின் படைப்பு என்ற அளவில் சொல்லும் படி இருந்தாலும் அதர்வவிருக்கு இது சொல்லும் அளவில் இல்லை. கதை தேர்ந்தெடுக்கும் விசயத்தில் அதர்வ கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இரும்பு குதிரை - காட்சிகள் பலம்.. வேகம் குறைவு
www.kollywoodtimes.in