The movie reminded me of National blind federation and how I was conned into joining it, by my relatives, who were school teachers as well. As long as gullible people are there, con men will certainly rule the roost!
Definitely gonna be HAT-TRICK for THIRRUPATHI BROTHERS...
Very good execution of a script..பட்டாசான படம்..
Çon genre of attempt in Tamil Cinema..Screenplay was good (the cards before each portion reminded Quentin Tarantino)..
Actor Natraj scores with his natural dialogue delivery..
படத்தின் வசனங்கள் தான் படத்தின் மிகப்பெரிய தூண்...போற போக்கில் அட்டகாசமான வசனங்கள்...
Like
நல்லவனா இருந்தா செத்ததுக்கு அப்புறம் சொர்கத்துல வாழலாம்..
கெட்டவனா இருந்தா வாழும் போதே சொர்கத்த பாக்கலாம்
Editing was apt for the script..Cinematography was in a mood for the movie...
Definitely a Worthy watch..
Congratz to whole team..
நடராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான் சதுரங்க வேட்டை.
கதை
ஏமாற நினைப்பவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வித்தைகளை கற்றுக்கொண்ட பிறரை ஏமாற்றி கோடி கோடியாக சம்பாதிக்கிறார் ஹீரோ நடராஜ் .ஒரு கட்டத்தில் போலீஸ்-யிடம் சிக்குகிறா நம்ம ஹீரோ ."நான் அவன் இல்லை" பாணியில் வெளியே வருகிறார்,வந்த உடனே ஹீரோ ஏமாற்றிய ஒருவர் ஆள் வைத்து ஹீரோவை கடத்துகிறார் தன்னிடம் கொள்ளை அடித்த பணத்தை தரும்படி ஹீரோவை கேட்கிறார்.உயிருக்கு பயந்து பணத்தை கொடுக்க முன் வருகிறார் ஹீரோ. ஆனால் ஹீரோவின் நண்பர்கள் அவரை ஏமாற்றி விடுகிறார்கள் இதன் பிறகு ஹீரோ நல்லவனாக மாறினாரா ? என்பதுதான் படத்தின் மீதி கதை
நடிகர்களின் பங்களிப்பு
நடராஜ்-அலட்டல் இல்லாத நடிப்பு, தெளிவான வசன உச்சரிப்பு என்று தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.இஷாரா நாயர் நாயகியாக பாஸ் மார்க் கொடுத்து விடலாம்( பார்வைக்காக).இளவரசு,பொன்வண்ணன் & வில்லன் நடிகர்கள் அனைவரும் தங்களின் நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் குறிப்பாக கடைசி நேரத்தில் இரண்டு உயிர்களை காப்பாற்ற போராடும் அந்த வில்லன் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.
டெக்னிக்கல்
பின்னணி இசை,படத்தில் வரும் ஒரேயொரு பாடல் இரண்டுமே படத்திற்கு கூடுதல் பலம் அதிலும் பின்னணி இசை "ஐ" கிளாஸ்.ஒளிப்பதிவாளர் அடிக்கடி கேமராவை மேல்நோக்கி கொண்டு செல்வதற்கான காரணம் புரியவில்லை மற்றபடி ok தான்.இதுமாதிரியான படங்களை எடிட் செய்வது கடினமான விஷயம் தான் அதை சரியாக செய்து இருக்கிறார் ஆனாலும் பல இடங்களில் காட்சிகளை கட் செய்து இருப்பது நமக்கு தெரிகிறது.வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்("மூடர்கூடம்" படத்திற்கு பிறகு நான் ரசித்த வசனங்கள்).
சவுண்டு
தமிழ் படங்களில் சவுண்டு மிக்ஸிங் சரிவர பயன்படுத்துவதில்லை இப்படத்திலும் அப்படித்தான் .
இயக்குனர்
முதலில் இந்த புது முயற்ச்சிக்கு என்னுடைய பாராட்டுகள்.புதுமுக இயக்குனராக இருந்தாலும் தைரியமாக பிளாக் காமெடி என்று சொல்லப்படும் ஒரு வகை காமெடி ரகத்தை எடுத்து கொண்டு அதற்கு ஐந்து வகையான திரைக்கதை அமைத்து ரசிகர்கள் ரசிக்கும்படி தந்து இருக்கிறார் இயக்குனர் வினோத், இருந்தும் இரண்டாவது பாதியில் சில இடங்களில் தோய்வு ஏற்படுகிறது.
படம் பற்றிய அலசல்
படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் கதையின் ஓட்டத்தை கணித்து விட முடிகிறது ஆனால் நடராஜ் எப்படி ஏமாற்றுகிறார் என்பதுதான் ட்விஸ்ட் ஒவ்வொரு முறை ஏமாற்றும் போது தமிழ்நாட்டு மக்களின் அறியாமை தான் கண்ணுக்கு தெரிகிறது.இரண்டாவது பாதி தொடக்கத்தில் படம் வேகமாக நகர்ந்தாலும் சற்று நேரத்தில் திரைக்கதையின் வேகம் குறைகிறது இதை புரிந்து கொண்ட இயக்குனர் கடைசி 20 நிமிட காட்சிகளை வேகமாக நகர்த்தி செல்கிறார். என்னதான் வித்தியாசமான கதைக்களத்தை தேர்தெடுத்தாலும் படம் பார்க்கும்போது குறும்படத்தை பார்ப்பது போல தோன்றுகிறது.
பலம்
வசனங்கள்,பின்னணி இசை,ஏமாற்றும் காட்சிகள்,கடைசி 20 நிமிட காட்சிகள்
பலவீனம்
குறும்படம் பார்ப்பது போல தோன்றுவது,இரண்டாவது பாதியில் ஏற்படும் தோய்வு
இயக்குனர் பாராட்டு பெறும் இடங்கள்
இன்றைய சமுதாயத்தில் நடந்து கொண்டு இருக்கும் பிரச்சினையை நேரடியாக இவையெல்லாம் போலியான விஷயங்கள் என்று தெளிவாக சொல்லிருப்பது இயக்குனரின் திறமை.
கடவுள் என்பவர் பாசிட்டிவ் எனர்ஜி மட்டும்தான் என்று கிளைமாக்ஸ் காட்சியில் சொல்லிருப்பது இயக்குனர் டச்.
அன்பை பணத்தால் வாங்க முடியாது என்பதை இறுதி காட்சியில் வசனங்கள் மூலமாக சொல்லிருப்பது இயக்குனரின் திறமை.
டாடி எனக்கு ஒரு டவுட்டு
சார் அந்த MLM கம்பெனியில் ஏமாந்த ஆள் நீங்க தானே ? உண்மையை சொல்லுங்க சார்?
ரசிகர்கள் கமெண்ட்ஸ்
மூடர் கூடம் படத்தை நான் ரசித்து பார்த்தேன் இந்த படமும் எனக்கு பிடிச்சு இருக்கு மச்சி...நான் கமர்ஷியல் ரசிகன் டா எனக்கு பிடிக்கல
மொத்தத்தில் "சதுரங்க வேட்டை" கொடுத்த காசுக்கு என்னை ஏமாற்றவில்லை உங்களை ஏமாற்றி இருந்தால் அதுவும் வெற்றி கணக்கு தான் காரணம் படத்தின் கதையே ஏமாற்றுவது தானே பாஸ்.
by
ரஞ்சித் விக்ரம்
www.mrmoviereview.in
highlights the various and latest modus operandi by cheaters of different sectors.,
http://pesalamblogalam.blogspot.in/2014/07/sathuranga-vettai.html
தேவைக்கேற்ப கழட்டி விடப்பட்ட லாஜிக் , எதிர்பார்த்த க்ளைமேக்ஸ் , ஹீரோவின் மேல் பச்சாதாபம் வரவைப்பதற்காக திணிக்கப்பட்ட ஃப்ளாஷ்பேக் இப்படி சின்ன சின்ன குறைகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் இந்த சதுரங்க வேட்டை எனும் சலிக்காத ஆட்டத்தை நிச்சயம் ரசிக்கலாம் .
ஸ்கோர் கார்ட் : 43