ஒரு வருடத்திற்குப் பின் நேற்றுதான் திரை அரங்கம் சென்று இந்த சுல்தான் படம் பார்த்தேன்.
அதுவும் கார்த்தி படம் என்பதாலும் ஏமாற்ற மாட்டார் என்ற தைரியத்திலும் கொரொனாவையும் பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுத்து பார்த்தேன். Worth Seeing!
படத்தில் நிறைய மெசேஜ்.
1. விவசாயம் செய்யாமல் நீண்ட நாள் நிலத்தை தரிசாக போட்டால் corporate களின் கண்ணை குத்தும், பிறகு நிலம் விவசாயத்திற்கு ஏற்றதல்ல என்று தாரை வார்க்க வேண்டி இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல threatening msg.
2. ரௌடிகளை பல்லாண்டு வாழ்க MGR போல ஒரு காவல் துறை அதிகாரிதான் திருத்த வேண்டும் என்றில்லை. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என நல்ல msg கொடுக்கும் படம்.
3. ரௌடிகள் திருந்தி வாழ நினைத்தால் எத்தனையோ வழி இருக்கிறது என வழி காட்டும் படம்.
நிறைய sentiments கலந்து அற்புதமாக ஒரு படம் கொடுத்த புதுமுக இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
கார்த்தி தனக்கே உரிய பாணியில் அற்புதமான ஒரு நடிப்பை கொடுத்திருக்கறார். குறை சொல்லும்படி எந்த காட்சியும் இல்லை.
100% best picturization clubbed with music, dance, songs etc. 5 out of 5.
Director, you will be very soon approached by Rajni/ Vijai/ Ajith for a chance. Make the script ready. ALL THE BEST.