Love Treat Given By Prabhu Solomon Sir.Mass Dhanush and Cute Keerthi Suresh Awesome Performance.in Future Ilaya Sper Star Dhanush and Lady Superstar Keerthi Suresh
சில தோல்விகளுக்கு பிறகு மைனா வால் உயர பறந்த பிரபு சாலமன் அதை தக்க வைக்கும் முயற்சியில் மீண்டும் தடுமாறியிருக்கும் படம் தொடரி . ஆனாலும் கும்கி யையே காதல் காவியமாக்கிய தமிழ் ரசிகர்கள் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது என்று நம்பலாம் ...
டெல்லி டூ சென்னை ஓடும் ரயிலில் பேன்ட்ரி பையனுக்கும் ( தனுஷ் ) , அதில் பயணம் செய்யும் நடிகையின் டச்சப் பொண்ணுக்கும் ( கீர்த்திசுரேஷ் ) ரொமான்ஸ் , அதுவும் எப்படின்னா 160 கிமீ வேகத்துல தறி கெட்டு ஓடுற ட்ரெயின்ல டாப்ல தனுஷ் ஆடிப் பாடுற அளவுக்கு லவ் . இப்போ இந்த ட்ரெயின்ல இருக்குற 700 த்து சொச்சம் பயணிகளோட சேர்த்து நம்மளும் தப்பிச்சோமான்றது தான் கதை ...
சினிமா ல ஹீரோஸ் பொதுவா பணக்காரங்ககிட்ட கொள்ளையடிச்சு ஏழைகளுக்கு தருவாங்க . அதையே தான் தனுஷ் இந்த மாதிரி படங்கள்ல நடிச்சு சம்பாதிச்சு காக்காமுட்டை , விசாரணை மாதிரி படங்கள எடுக்குறாப்ல போல . க்ளைமேக்ஸ்ல மட்டும் கொஞ்சம் நடிக்க வுட்ருக்காங்க . மத்தபடி தம்பி ராமையாவையும் , கீர்த்தி யையும் ஓட்டறத தவிர பார்ட்டிக்கு பெருசா வேலையில்ல . ரசிகர்களுக்காக உத்தமன் கூட ஒரு சண்டை போடறாரு . கீர்த்தி சுரேஷ் நல்லா அறிமுகமாகி அப்புறம் பாடுறேன் பேர்வழி ன்னு வழிஞ்சு கடைசியா ஜெனிலியாவையே மிஞ்சுற அளவுக்கு அளவுக்கு பக்கா லூசாயிடுறாங்க . பாலச்சந்தர் ஆவி கூட பிரபு சாலமனை சும்மா விடாது ...
தம்பி ராமையா இயக்குனரை கைவிடல . நடிகை சிரிஷா வுக்காக இவர் விடும் காதல் தூதெல்லாம் அதர பழசுன்னாலும் முடிந்தவரை தனது முகபாவங்களால் சிரிக்க வைக்கிறார் . இவர் தனுஷ் & கோ வுடன் அடிக்கும் லூட்டிகள் ப்ரெண்ட்ஸ் வடிவேலுவை நினைவு படுத்துகின்றன . We Miss You Vaigaipuyal . கவிஞராக வரும் கருணாகரன் மொக்கை போட்டாலும் கிச்சுகிச்சு மூட்டுகிறார் . அமைச்சராக ராதாரவி வரும் ஸீன்களெல்லாம் அடடா . பிகினிங்கில் படத்தின் டெம்போ வை ஏற்றும் உத்தமன் கேரக்டர் போக போக சவசவ . அதிலும் தேவையில்லாமல் மலையாளிகளை சீண்டிப் பார்ப்பது போல வரும் சீன்கள் இயக்குனரின் வீண் குசும்பு ...
இமான் இசையில் மூன்று பாடல்களில் கடைசி பாடல் ரசிக்கவைக்கிறது . ஆனால் படம் முடியும் நேரத்தில் வந்து வெறுப்பேற்றுகிறது . சிஜி நிறைய இடங்களில் பல்லிளித்தாலும் ஒளிப்பதிவு பளிச் . வேகமா ஓடுற ரயில்ல உச்சா போறதே கஷ்டம் ஆனா இதுல பாட்டு , பைட் னு பின்னி எடுக்குறாங்க . காமெடியோட ஆரம்பிச்சு அத வச்சே ஒப்பேத்தி பேசெஞ்சர் வேகத்துல போற படம் போகப்போக எக்ஸ்பிரஸ் வேகம் பிடிப்பது பலம் . நிறைய கேரக்டர்கள் வந்தாலும் எல்லோரையும் கவனிக்க வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . சீரியசாக போகும் காட்சிகளில் கூட காமெடியை சரியாக சொருகியிருக்கும் விதம் அருமை ...
படத்தில் எத்தனையோ லாஜிக் ஓட்டைகள் இருந்தும் மீடியாவை கலாய்க்கும் சீன்கள் கைத்தட்டல் வாங்க தவறவில்லை . ஐடியா கொடுக்க ஹாலிவுட் படம்லாம் பாக்க தேவையில்லை என்று வசனம் வருகிறது . பாவம் பிரபு சாலமன் Speed , Unstoppable படங்களையெல்லாம் பார்க்கவில்லையென்றோ , ரயில்ல வச்சு Titanic மாதிரி ஒரு படம் பண்ணணும்னெல்லாம் நினைக்கவில்லையென்றோ நம்பித் தொலைப்போமாக . ட்ரெயின் திடீர்னு படு வேகமா ஓடுறப்போ முதல்ல அந்த ட்ரைவர் என்ன ஆனான்னு பாக்காம தீவிரவாதி , விவாத மேடை அது இதுன்னு சுத்தி வளைச்சு கடைசியில க்ளைமேக்ஸ் ல அந்த மேட்டருக்கு வராங்க . அதுவும் கம்பார்ட்மெண்ட் மேல உக்காந்துக்கிட்டு குரங்கு சேட்டை பண்ணிக்கிட்டு இருக்கற தனுஷ முதல்லயே அனுப்பிச்சு ட்ரெயின நிப்பாட்டியிருக்கலாம் . பட் என்ன செய்ய படம் முடிஞ்சிருமே ?! ...
தனது தயாரிப்பில் வந்த விசாரணை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தொடரி மாதிரி படங்கள் தனுஷுக்கு திருஷ்டிக்கழிப்பு தான் . அதே நேரம் அப்படியிப்படி தடுமாறினாலும் காமெடி , ரொமான்ஸ் , த்ரில்லிங் என ஆடியன்ஸ் பல்ஸை கணித்து சரியான கலவையில் படத்தை பிரபு சாலமன் கொடுத்திருப்பதால் தொடரி ஓடும் ...
ரேட்டிங் : 2.5 * / 5 *
ஸ்கோர் கார்ட் : 41